மோட்டார் சைக்கிள் மீது ரெயில் மோதி 25 நாளான புதுமணத் தம்பதி பரிதாப பலி

17.11.12

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஐ.ஓ.சி. நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (வயது 25). இவர் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்னர்தான் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுபாஷினியுடன் திருமணம் நடந்தது.

16.11.2012 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கணேஷ் ஆனந்த் தன்னுடைய மனைவி சுபாஷினியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் வேப்பம்பட்டு, திருநின்றவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மூடப்பட்டிருந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார்கள்.

அப்போது சென்னையில் இருந்து கடம்பத்தூர் நோக்கி வந்த மின்சார ரெயிலை கணேஷ் ஆனந்த் கவனிக்கவில்லை. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது மின்சார ரெயில் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். 

0 கருத்துக்கள் :