வெலிக்கடை சிறைச்சாலை மோதல் 13 கைதிகள் மரணம். 45 பேர் காயம். 11 விசேட அதிரடிப்படையினரும் காயம்

9.11.12

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 13 கைதிகள் வரை கொல்லப்பட்டனர். படையினரின் துப்பாக்கி சூட்டிலேயே கைதிகள் கொல்லப்பட்டனர். காயமடைந்த 45 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 13 பேரே கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 11 விசேட அதிரடிப்படையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிங்கள கைதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று மாலை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோபமுற்ற கைதிகள் குறித்த படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்ட பின்னரே இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கி சமர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற கலகத்தில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த கட்டளையதிகாரி பிரதி பொலிஸ் அதிபர் ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவனவும் காயமடைந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சத்திரசிகிச்சைக்கு உட்படு;த்தப்பட்டுள்ளார் எனினும் இந்த சம்பவங்களில் தமிழ்க் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :