இலங்கையில் 1000 ரூபா நாணயக்குற்றி வெளியீடு

12.11.12

இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பானிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இவ் நாணயக் குற்றி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாணயக்குற்றிகளைக் கையளித்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 57 ஆவது ஞாபகார்த்த நாணயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :