சிறிலங்கா இராணுவத்திடம் 100 தமிழ்ப் பெண்களை பெற்றோரே ஒப்படைக்கின்றனர்

16.11.12

இரத்த மழை இதுக்கு தான் பெய்ததோ?? கிளிநொச்சி பாரதிபுரத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில், 100 தமிழ் இளம் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படையில், 6வது பெண்கள் படைப்பிரிவு பற்றாலியனில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இராணுவப் பயிற்சிக்குப் பின்னர், இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ - குடியியல் ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 18 - 22 வயதுக்கிடைப்பட்ட இவர்கள் சாதாரண படைச் சிப்பாய்களாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பில், தெரிவு செய்யப்பட்ட இவர்களை நாளை நடைபெறும் நிகழ்வில் பெற்றோர் அதிகாரபூர்வமாக சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கவுள்ளனர்.

0 கருத்துக்கள் :