லெப்.கேணல்கள் டயஸ், சாந்தகுமாரி, புனிதா ஆகியோரின் நினைவு நாள் இன்று

6.10.12

06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

0 கருத்துக்கள் :