மேலும் இரு தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் ஜெ.வுடன் சந்திப்பு

28.10.12

மேலும் இரண்டு தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி அருண்பாண்டியன் ஆகிய இரு தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். முதல்வர் ஜெயலலிதாவிடம் தங்களது தொகுதி பிரச்சனைகளை விளக்கியதாக, சந்திப்பிற்கு பின் இருவரும் கூறினர். முன்னதாக நேற்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழழகன், சுந்தரராஜன் இருவரும் ஜெயலலிதாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :