முள்ளிவாய்க்காலில் படையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்!

9.10.12

முள்ளிவய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் பொதுமக்கள் தம்மால் புதைத்துவைத்த, கைவிடப்பட்ட பொருட்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பழைய இரும்புகளும் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் சிங்களப்படையினர் பளைய இரும்புகளை சிங்கள வியாபாரிகளுக்கு எடுத்து வீற்பனை செய்யும் பொருட்டு அவற்றை பொதுமக்கள் எடுக்கவிடாமல் தடுத்தும் தாக்கியும் வருகின்றனர். இது விடயத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் வீதிக்கு தென்முனையில் சிங்களப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. . இந்த முறுகல் நிலை முற்றவே, தாம் கொண்டுவந்த தடிகள், பொல்லுகள் என்பவற்றால் பொதுமக்களை படையினர் விரட்டிவிரட்டி தாக்கினர். இதனால் மக்கள் சிதறி ஓடினார்கள் எனினும் அவ்வாறு ஓடியவர்களில் இருவரை பிடித்த இராணுவம் அவர்களை கட்டி வைத்து கண்மூடித்தனமாகத் தாக்கியது. . “ஐயோ! எங்களை கட்டி வைத்து அடிக்கிறாங்கள். யாராவது வந்து காப்பாற்றுங்கள்” என்று அந்த இருவரும் பெரும் குரலில் ஓலமிட்டனர். இதனைத் தொடர்ந்து கையில் அகப்பட்ட தடிகளுடன் விரைந்து சென்ற பொதுமக்கள் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். . இதன்போது இருதரப்புக்கும் இடையே பெரும் கைகலப்புத் தோன்றியது. இறுதியில் பொதுமக்களின் அடி தாங்க முடியாமல் படையினர் ஓடிவிட்டனர். பின்னர் படையினரால் கட்டி வைக்கப்பட்டிருந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டனர்.. இந்தச் சம்பவத்துக்கு பின்னர் குறித்த பகுதியில் பொது மக்கள் சென்று தம் உடைமைகளை எடுத்துவர படையினர் அனுமதி மறுத்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :