கிருமிநாசினி கலந்த பாலை குழந்தைகளுக்கு பருக்கி, தானும் குடித்த தாய்

7.10.12

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றில் மன வேதனையுற்ற மனைவி தமது இரு பிள்ளைகளுக்கும் கிருமி நாசினி கலந்த பாலை பருக்கி விட்டு மீதமுள்ள பாலை தாமும் அருந்தியுள்ள சம் பவமொன்று ஹாலி ௭லபகுதியின் சென். ஜேம்ஸ் தோட்டத்தில் வெள்ளியன்று இடம்பெற்றுள்ளது. கிருமிநாசினி கலந்த பாலைக்குடித்த மூவரும் ஆபத்தான நிலை யில் பதுளை அரசினர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 வயது நிரம்பிய தாய் அவரது ஒன்றரை வயது நிரம்பிய பெண் குழந்தை, நான்கு வயது நிரம்பிய சிறுவன் ஆகியோர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டு ள்ள வ ர் களாவர். இம்மூவரின் நிலை கவலை க்கிடமாக இருப்பதாக மருத்துவ மனை வட் டார ங்கள் தெரிவித்தன. கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற் பட்ட தகராற்றினையடுத்து கணவன் கொழும்புப்பகுதிக்குத் தொழிலுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பெண் மேற்படி தற்கொலை முயற்சியை மேற் கொண்டதோடு தமது பிள்ளை களுக்கும் கிருமி நாசினி கலந்த பாலைக் கொடு த்து விட்டு தாமும் மிகுதிப்பாலை அருந்தி யுள்ளார். பதுளைப் பொலிஸார் இது தொட ர் ப ான விசார ணைகளை மேற்கொண் டுள் ளனர்.

0 கருத்துக்கள் :