நித்தியானந்தா திடீர் தலைமறைவு!

21.10.12

மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்குவதாக மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் அருணகிரிநாதர் புகார் மனு கொடுத்தார். இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதன் அடிப்படையில் நித்தியானந்தா கைது செய்யப்படலாம் என்று வதந்தி பரவியது. அவரது சீடர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். தனது வக்கீல்களுடன் நித்தியானந்தா அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் திருவண்ணா மலையில் உள்ள ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா வெளியேறி விட்டடாக கூறப்படுகிறது. அவர் இதுவரை ஆசிரமத்திற்கு திரும்பி வரவில்லை. பெங்களூர் சென்றாரா? அல்லது வேறு எங்காவது சென்றுவிட்டாரா? என்பதும் தெரியவில்லை. இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நித்தியானந்தா மீது பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :