குடி குடியை கெடுக்கும்... இங்கு ஓட ஓட விரட்டி கொலை

8.10.12

டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்த தகராறில், வாலிபர் ஓட ஓட விரட்டி கொல்லப்பட்டார். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர்கள் பெருமாள்(29), சீனிவாசன்(30), செந்தில்(27), காளிதாஸ்(30), செந்தில்குமார்(32). கட்டிட தொழிலாளிகள். நண்பர்கள். 5 பேரும் நேற்று மாலை கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது போதை அதிகமாகி காளிதாஸ் வாந்தி எடுத்துள்ளார். அருகில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் 6 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது வாந்தி தெறித்தது. இதை அவர்கள் கண்டித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 6 பேரும் 5 பேரை தாக்கத் தொடங்கினர். அவர்களும் பதிலுக்கு தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறி, கோவை & மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றனர். அவர்களை 6 பேரும் ஓட, ஓட விரட்டி சென்று உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் நிலை குலைந்து விழுந்த பெருமாளை கத்தியால் குத்தினர். இதில் அவர் இறந்தார். பின்னர் சீனிவாசனையும், செந்திலையும் கத்தியால் குத்தினர். அவர்கள் படுகாயமடைந்தனர். இதைக் கண்ட கடைக்காரர்கள், கும்பல் தங்கள் கடைகளில் புகுந்து விடுமோ என்று பீதியடைந்து கடைகளின் ஷட்டர்களை இறக்கி சாத்தினர். வெட்டவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாய மடைந்த சீனிவாசன், செந்தில் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். பெருமாளின் சடலத்தை மீட்டனர். கொலைவெறி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதில் தொடர்புடைய சேர்ந்த ராஜன் (30) என்பவர் சிக்கினார். அவரை கைது செய்தனர். பின்னர் சந்தோஷ்(29) என்பவரை நேற்று இரவு பிடித்தனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :