மீண்டும் ஒரு ஒட்டுமொத்த தமிழ் இன அழிப்பை நோக்கி.!மன்னாரில் ?

31.10.12

இவ்வளவு காலமாக மன்னார் கடற்பரப்பிலே எண்ணெய் வளம் உள்ளதாகவும் அவ்வெண்ணெய் வளத்தின் மூலம் இலங்கையின் பொருளாதார நிலமையில் நேர் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தை அரச இயந்திரம் உள்நாட்டு மக்களுக்குப் பரப்பி வந்தது.
இதன் தொடர்ச்சியாக பல நாடுகளை இங்கு வரவழைத்த இலங்கை அரசு 3 கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இரண்டு கிணறுகளின் ஆய்வு முடிவுற்றுள்ளதாகவும் அவற்றில் எண்ணெய்ப் படிவங்கள் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது கூறும் கருத்துக்களின் பின்னணியில் தமிழருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு பல மைல் கற்களை தாண்டி வெற்றி நடைபோடும் ஆயுதமில்லா இனவழிப்பு நடவடிக்கையின் ஆழத்தை சற்று உற்று நோக்குவோமாக…
 வெளிப்படை உண்மைகள்
1. ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியில் கூடிய கவனம் செலுத்தி அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும்.
 2. ஏற்றுமதியை கூட்டுகின்ற அதே வேளை ஒரு பொருளின் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்குமான வித்தியாசத்தை கூட்டுவதன் மூலமே அதிக இலாபத்தைப் பெற முடியும்.
3. அதிக லாபத்தை பெற வேண்டி விற்பனை விலையை கூட்ட முடியாது. ஏனெனில் விலை நிர்ணய கட்டுப்பாடு. ஆகவே உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும்.
 4 . உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டுமானால் கருச்சக்தியை (அணு உலைகள்) மட்டுமே முதல் சக்தியாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம். அதன் மூலமே தேவையான சக்தியைப் பெறுவதோடு ஒரு அலகுக்கான செலவை மிகவும் குறைக்க முடியும்
5. உலகிலேயே அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகள் எல்லாமே அணு உலைகளை கொண்டுள்ளன.
6. தோரியம், யுரேனியம் போன்ற கனியங்களை வழங்குகின்ற நாடுகள் அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பது சட்டம்.
 7. ஒரு நாடு எவ்வளவு அணு உற்பத்தியைச் செய்கின்றது என்பதை அதற்கு கனியங்களை வழங்கும் நாடுகளின் விற்பனைப் பட்டியலிலிருந்து அறிய முடியும். ஆனால் விற்பனை செய்யப்படுகின்ற கனியங்களைப் பயன்படுத்தி உருவாக்கும் கருச்சக்தியை விட பல மடங்கு சக்தியை வல்லரசு நாடுகள் உற்பத்தி செய்கின்றனவே எவ்வாறு? சட்ட விரோத கனிய கொள்வனவு ஆனால் இச்சட்ட விரோத கொள்வனவால் உருவாகும் அணுக்கழிவுகளுக்கு கனியங்களை விற்பனை செய்யும் நாடுகள் பொறுப்புக் கூறமாட்டா. அதே நேரம் அவ்வணுக் கழிவுகளை தத்தமது நாடுகளில் புதைப்பதற்கு அணு உலைகளை கொண்டுள்ள நாடுகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல? அவ்வாறாயின் அக்கழிவுகள் எங்கே செல்கின்றன?
8. அக்கழிவுகளை அகற்றுவதற்கு வல்லரசுகள் வறிய மற்றும் உள்நாட்டுப் பிரச்சனை உடைய நாடுகளை இலக்கு வைக்கின்றன. வல்லரசுகள் பயன்படுத்தும் அஸ்திரங்கள் அன்பளிப்பு, கடனுதவி, ஆயுத வழங்கல் போன்றவை ஆகும்.
 9. ஒரு கொள்கலனில் ஆயுதமோ, பணமோ வருகின்றது என்றால் இன்னொரு கொள்கலனில் அந்நாட்டு அணுக்கழிவுகளை அனுப்பி வைக்கின்றன வல்லரசுகள். அவ்விரு கொள்கலன்களையும் ‘இலங்கை அரசு’ முகமலர்ச்சியுடன் வாங்கிவிட்டு ஆயுதம் நிரம்பிய கொள்கலனில் உள்ள ஆயுதங்களால் தமிழர்களை அழித்துக் கொன்று விட்டது.
 10. மறுகொள்கலனை தமிழர் வளமிக்க பிரதேசங்களில் புதைப்பதன் மூலம் எஞ்சியுள்ள தழிழரையும் இன்னும் 5 வருடங்களில் சத்தம் சந்தடியின்றி அழிக்கும் நடவடிக்கை எப்பொழுதே எடுத்தாகி விட்டது.
 11. 5 வருடங்களில் அழிவா? எவ்வாறு? 5 வருடங்கள் தேவையே இல்லை. புதைத்த கழிவுகள் கடலில் கசிய ஆரம்பிக்குமா இல்லையா? கசிந்தால் மீனினங்கள் கதிர்வீச்சுக்கு உள்ளாகுமா இல்லையா? அம்மீனைப் பிடித்து வந்து நாம் உட்கொள்ளும் போது நாம் கதிர்ப்பு தாக்கத்திற்கு உள்ளாகுவோமா இல்லையா? உள்ளாகினால் என்ன நடக்கும்?
வரும் பாரிய விளைவு
01 பிறக்கும் பிள்ளைகளின் சுயஅறிவு குன்றும். விளைவு: கல்விச் சமூகம் என்ற பெயரையே நாம் முதலில் இழப்போம். வரும்

பாரிய விளைவு  02 பிள்ளைகளின் உடல் வளர்ச்சி குறைவடைவதோடு, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும். விளைவு: ஆரோக்கியமற்ற ஊனமுற்ற பரம்பரை என்ற சிறப்புப் பெயரை காலம் எமக்கு சூட்டும். வரும்

பாரிய விளைவு  03 மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல தழிழர் பிரதேசங்களிலே எல்லாம் தமிழனின் இருப்பு துடைத்தெறியப்படும். விளைவு: தனித்துவமான சிங்கள நாடு. இவற்றுக்கெல்லாம் இலங்கை அரசு சொல்லப்போகும் பதில் என்ன தெரியுமா??
 சொல்லப்போகும் பதிலால் இலங்கைத்தமிழருக்கும் தென்னிந்தியத் தமிழ் உடன் பிறப்புகளுக்கும் இடையே நிரந்தரப்பகையை ஏற்படுத்தும். அப்பதில் என்ன??   பதில்- தென்னிந்திய கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின்னிலையத்திலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளே இதற்குக் காரணம். இப்பதிலை சரியான நேரத்தில் சொல்லத்தான் இப்போதே கூடங்குளம் அணுமின்நிலைய அமைவிற்கு எதிர்ப்பு கோசங்களை அடிக்கடி சொல்லிவருகின்றது.
இந்த படுபாதக செயலுக்கு பின்னால் இலங்கை அரசும் இந்திய அரசுமே செயற்படுகின்றன. ஏனெனில் தமிழனை இவர்கள் இருவருமே விரோதிகளாக பார்க்கின்றனர். இப்போதே இவர்களின் கபட செயலை உணராவிட்டால் இந்த விளைவு எமக்கு ஏற்படும் போது நாம் எமது தென்னிந்திய உறவுகளுடன் நிரந்தரப்பகையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்படுத்திக் கொள்வோம். அதுவே வெற்றியாகவும் அமையும். சிங்களவர்கள் மன்னார் கரையோரப்பிரதேசத்தில் குடியேற்றப்படுவதன் நோக்கமே இந்த கொடிய செயலை மூடி மறைக்கவே.
தமிழனின் இருப்பை வடக்கு கிழக்கில் இல்லாதொழிக்க தமது சிங்கள மக்கள் ஒரு இலட்சம் பேரை சாகடிப்பது இலங்கை அரசுக்கு ஒரு விடயமல்ல என்பதே வெளிப்பாடு. 
அதுவும் இக்கொடிய அணுக்கழிவுகளை கடலில் புதைக்க காரணம் கடல் வளம் மூலமே வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அணுக்கதிர்வீச்சு தாக்கத்தை கொண்டு செல்ல முடியும்.
 தென்பகுதிகளுக்கும் இவை பரவுமே என்று நீங்கள் கேட்கலாம். இல்லவே இல்லை. தாக்கம் ஏற்படத்தொடங்கியவுடன் தென்பகுதிக்கான கடல் வள ஏற்றுமதியை வடக்கு கிழக்கில் அரசாங்கம் தடை செய்யும். அதற்கும் இலங்கை அரசு சொல்ல போகும் காரணம் தென்னிலங்கையில் கடல் வளம் நிரம்பல் நிலையில் உள்ளது. நிரம்பல் நிலையில் இல்லாவிடினும் வெங்காயம் புகையிலை இறக்குமதி செய்தது போன்று கடல் வளத்தையும் இறக்குமதி செய்வதொன்றும் புதிய விடயம் இல்லையே இலங்கை அரசுக்கு. ‘ஹிரோசிமா, நாகசாகியில் ஒரு நாளில் ஏற்பட்ட அழிவிலும் பார்க்க பலமடங்கு அழிவை குறைந்தது 2- 3 வருட காலத்தில் நாம் எதிர் கொள்ளுவோம். -கல்யாணி-

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு என் பாராட்டுகள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)