மூன்று வருட சோற்றுக் கடனுக்காக முப்பது ஆண்டுகாலமாக உண்ட இடத்திற்கு வினைவிதைப்பதா?

28.10.12

விடுதலை நோக்கிய போராட்டத்தில் துரோகிகள், சதிகாரர்கள் என ஒற்றன்கள் தோன்றுவதும் பின்னர் இல்லாது போவதும் வரலாறு. அந்த வகையில், விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர், தனது வயிற்றுப் பிழைப்புக்காக, புனிதமான விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவது பச்சத் துரோகத்தனமாகும். ஒரு நிமிடத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் சிங்களவன் கொடியவன், கொலைவெறியன், ஈவிரக்கமற்றவன் என பேசியவர் இன்று, பேரினவாதிகளுக்கும் அதனுடன் இணைந்து செயற்படும் படைத்துணைக்குழு அமைப்புக்கும் முண்டு கொடுப்பதை விட ஈழத்திற்காக உயிரை விடுவது மேலான விடயம். ஒரு இனத்தின் விடுதலை போராட்ட வரலாற்றில் குறித்த விடயத்தை அடைய வேண்டும் அல்லது மாண்டுவிட வேண்டும் என்பது தாரக மந்திரமாக அனைவராலும் கருதப்படும் நிலையில், போராட்டத்தின் வரலாற்றையும், அதன் நோக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள் அதுமாத்திரமல்ல, சிங்கள அரசினாலும், அதன் படைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான கொடூரங்களையும் கண்டவர்களின் இவ்வாறான கருத்துக்களை மக்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செல்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது அவர்களின் அரசியல் லாபத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற சுயலாப பிரசாரமே தவிர, அதில் உண்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். த ஹிந்துப் பத்திரிகையானது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டுவந்த பத்திரிகை, அத்துடன், அது இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான “ரோ”வின் ஒரு பிரதிநிதியாகவும் செயற்படுகின்றமை யாவரும் அறிந்தவிடயம். இன்று ஈழத்தமிழர் விடயத்திலும், சிறீலங்காப் படைகளினால் இந்திய தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தில் தமிழக அரசியல் தலைமைகள் கட்சி வேறுபாடுயின்றி இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துவருகின்றனர். அதிலும், ஈழத்தமிழர் விடயத்தில் பல்வேறு வகையில் அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், மீண்டும் ஒரு போராட்டத்திற்கான வழிவகைகள் ஏற்படலாம் என இந்திய மத்திய அரசு நம்புகிறது. அந்தவகையில், ஈழத்தமிழர் சார்பாக குரல் கொடுக்கும், வைகோ, பழநெடுமாறன், சீமான், தொல்திருமாவளவன் மற்றும் ஈழவாதிகளின் குரல்களை நசுக்க இந்திய மத்திய அரசும், சிறீலங்கா அரசும் சதித் திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தான் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பயன்படுத்திவருகின்றனர். உலக வல்லரசுகளினால் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட போது எமது தேசிய தலைவர் அவர்களின் மதிநுட்பத்திற்கு அமைய எமது விடுதலைப் போராட்டம் கைவிடப்படக் கூடாது அதேவேளை, பொதுமக்களின் அழிவையும் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆயுதப் போராட்டம் தற்காலியமாக மௌனீக்கப்பட்டன. ஆனால், அதனை சிங்கள அரசாங்கம் தனக்குத் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சமாதானம் நோக்கிப் புறப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை கொன்று குவித்ததுடன், சிங்களத்துடன் இணைந்து செயற்பட சம்மதித்துக் கொண்டவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஈழக் கனவை கலைப்பதற்காக குழப்பகரமான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது. இதேவேளை ,படை ரீதியாக விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை.எனினும் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு அரசியல் ரீதியாக அழுத்தங்களை அவர்களால் கொடுக்க முடியும். அத்துடன், வடக்கில் படை பிரசன்னம் அதிகரித்துள்ள என்பதையும் பொய்யான தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர் மன நோய்வாய்ப்பட்டுள்ளார். காரணம் இவரால் எவ்விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு அரச படைகளினாலும், அதன் கூலிப் படைகளினாலும் கண்காணிக்கப்பட்டுவருகின்றார். எனவே, வயிற்றுப் பிழைப்புக்கும் உயிர்ப்பிச்சைக்காகவும் எழுந்தமான கருத்துக்களையும், சிறீலங்கா அரசாங்கத்தினால் சொல்லிக் கொடுக்கும் கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதுதான் இவரின் பணியாக உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள்.

0 கருத்துக்கள் :