சுதந்திர தின வைபவத்தை திருகோணமலையில் நடத்த அரசு தீர்மானம்

11.10.12

நாட்டின் 65 ஆவது தேசிய சுதந்திÙ தின வைபவத்தினை திருகோணமலை நகரில் பிரதமர் தலைமையில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் தி.மு. ஜயரத்ன, வெளிநாடு சென்றிருப்பதனால் அவரது ஆலோசனையின் பிரகாரம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.ஜே. செனவிரத்னவின் தலைமையில் இக்குழு கூடியது. கூட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன, அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் 65 ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தினை திருகோணமலை நகரில் பிரதமர் தலைமையில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்து. அதற்கேற்ப தேசிய சுதந்திர தின வைபத்தினை சிறப்பாக நடாத்துவதற்கு சகல அரச நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். மேலும் இறுதிக்குள் திருகோணலை நகரின் பாதைகள், நீர் வழங்கல், மின்சாரம் உட்பட கீழ்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யுமாறும் அமைச்சர் உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை வழங்கினார். குறிப்பாக 65 ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தினை கண்டு களிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் தேசிய ஒற்றுமையினை எடுத்தியம்பும் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர் சுதந்திர தின கலாசார ஊர்வலத்தில் வடக்கு கிழக்கு பாடசாலை மாணவ மாணவிகளை அதிகளவு பங்கேற்கச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். இந்தக் கலந்துரையாடலில் கலாசார அலுவல்கள், அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதியமைச்சர்களான விஜய தஹநாயக்க, சுஷன்த புஞ்சிநிலமே, பிரதம அமைச்சரின செயலாளர் எஸ். அமரசேகர, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பீ. அபேகோன், திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ. ரன்ஜித் த சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மக்கள் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துக்கள் :