தென்பகுதியிலிருந்து கொண்டுவந்து விடப்பட்ட காட்டு யானைகள் அட்டகாசம்

17.10.12

தென்பகுதியில் வனவிலங்கு திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு, முத்தையன்கட்டு பகுதி காட்டில் விடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற காட்டு யானைகள் முத்தையன்கட்டு பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஊருக்குள் வருகின்ற இந்த யானைகளினால், வீடுகள், கடைகள் என்பன உடைக்கப்பட்டுள்ளதுடன் பயிர்களுக்கும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :