டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யாழில் தாயொருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

10.10.12

யாழ். வசந்தபுரம் கிராமத்தில் தனது மகளுக்கு நிலம் தருவதாக கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். குறித்த கிராமம் கடந்த 1995ம் ஆண்டு முதல் உயர் கடல்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டின் ஆரம்பத்திலேயே மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீள்குடியமர்ந்துள்ள மக்களில் நிலமற்ற மக்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜெயமணி (வயது45) என்பவரின் மகளுக்கு மட்டும் நிலம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து தனது மகளுக்கு நிலம் வழங்குமாறு கேட்டு குறித்த தாய் அமைச்சர் டக்ளஸிடம் சென்றுள்ளார். அதன்று நிலம் தருவதாக கூறியுள்ளார் அமைச்சர். ஆனால் நிலம் வழங்க முடியாதென மேயர் மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த தாய் அமைச்சரிடம் மாறி, மேயரிடம் மாறி என அலைந்து திரிந்தபோதும் நியாயமோ, நிலமோ கிடைக்காத நிலையில் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த நிலையில் வசந்த புரம் யாகப்பர் தேவாலகத்தில் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

0 கருத்துக்கள் :