கன்னத்தில் அறைந்தாள்: கத்தியால் குத்தினேன்: கள்ளக்காதலி கொலையில் காதலன் வாக்குமூலம்

24.10.12

சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்தவர் பச்சமுத்து (30). இவரது மனைவி தமிழ்செல்வி (24). இருவருக்கும், நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவரிடம் கோபித்து கொண்டு, தமிழ்செல்வி, கொண்டலாம்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். தற்போது, அவருக்கு, யமுனாதேவி என்கிற மூன்று வயது மகள் உள்ளார். அங்கு இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த, 21-ம் தேதி வழக்கம் போல, பூ வியாபாரத்துக்கு சென்ற தமிழ்செல்வி, அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை, 8 மணியளவில், ஊத்துக்குளி காடு, நடுகாடு பகுதியில், கழுத்து அறுக்கப்பட்டு, தமிழ்செல்வி, கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் கைப்பற்றிய தமிழ்ச்செல்வியின் மொபைல் ஃபோன் மூலம், துப்பு துலங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பாரத்நகரை சேர்ந்த சந்திரன் மகன் மாரிமுத்து (29), என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் போலீஸார் வாக்குமூலத்தில் கூறியதாவது: கட்டிட தொழிலாளியான நான், நான்கு மாதத்துக்கு முன், தமிழ்செல்வி வீட்டருகே, வேலைக்கு சென்றிருந்தேன். அப்போது, அவளுடன் பழக்கம் ஏற்பட்டது; மொபைலில் தொடர்பு கொண்டு, என்னை மிகவும் பிடித்திருப்பதாக கூறி, காதல் மொழி பேசினாள். அதையடுத்து, மொபைலில் அடிக்கடி கொஞ்சி பேசி, கள்ளக்காதலை வளர்த்து வந்தோம். தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் உள்பட, பல ஆண்களுடன் தமிழ்செல்விக்கு சகவாசம் இருந்தது. இதையறிந்த நான், அவளது தொடர்பை தவிர்க்க, திருச்செங்கோட்டுக்கே வேலைக்கு சென்று விட்டேன். எனினும், மொபைலில், மணி கணக்கில், என்னுடன் பேசி வந்தார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். பல ஆண்களுடன் உனக்கு பழக்கமுள்ளதால், உன் கர்ப்பத்துக்கு, நான் எப்படி காரணமாக முடியும் கேட்கவே, எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது திருமணத்துக்கு மறுத்தால், உன்னைப்பற்றி கடிதம் எழுதி வைத்துவிட்டு, நான் தற்கொலை செய்து கொண்டு, என்னை போலீஸில் மாட்டி விடுவதாக என்னை பலமுறை மிரட்டினார். சம்பவம் நடந்த, 21-ம் தேதியும், வழக்கம் போல மிரட்டல் விடுத்தார். அதனால், அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். சம்பவத்தன்று மாலை, 4 மணிக்கு, ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, இரவு, 7 மணியளவில், ஊத்துக்குளிகாடு, நடுகாடு பகுதிக்கு வந்தேன். ஏற்கனவே, தெரிவித்தபடி, தமிழ்செல்வியும் அங்கு வந்திருந்தாள். அங்கு, எங்களுக்குள் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசத்தில், அவளது கன்னத்தில் அறைந்தேன். பதிலுக்கு அவளும் அறைந்தாள். அதனால், கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நான், வண்டியில் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவளது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :