நித்தியானந்தா நீக்கம் :அருணகிரிநாதர் அதிரடி அறிவிப்பு...ஆதீனத்தின் காலைப்பிடித்து நித்தி சீடர்கள் கதறல்

19.10.12

நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பிலிருந்து நீக்குவது என்று மதுரை ஆதீனம் முடிவெடுத்துவிட்டார். இதனால் அவரது உயிருக்கும், மடத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகிறார். இதையடுத்து அவர், மடத்தில் தங்கியிருக்கும் நித்தி சீடர்களை வெளியேற்றக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால், நித்தியின் தலைமை சீடர் ரிஷி தலைமையில் 10க்கும் மேற்பட்ட நித்தி சீடர்கள் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலில் விழுந்து, இன்று ஒருஇரவு மட்டும் பொருத்துக்கொள்ளுங்கள். நாளை பேசி சரி செய்துகொள்ளலாம் என்று கதறினார்கள். ஆனாலும் அருணகிரிநாதர் அதற்கு சம்மதிக்காததால், போலீசார் நித்தி சீடர்களை மதுரை ஆதீன மடத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். xxxx மதுரை ஆதீனம் இன்று இரவு 8 மணிக்கு மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அம்மனுவில், ‘’நித்தியானந்தாவை நான் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்தேன். சில காரணங்களால் நாளை நான், நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனால் மடத்திற்குள் இருக்கும் நித்தியானந்தா சீடர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே, நித்தியானந்தா சீடர்களை இன்று இரவுக்குள் வெளியேற்றி என் உயிரை காப்பாற்றுங்கள். என் மடத்திற்கு தக்க பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றுங்கள்’’ என்று கூறியுள்ளார்.இந்த புகார் குறித்து விளக்குத்தூண்டு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆதீனமடத்திற்குள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார். xxxx மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று இரவு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். ஆதீனத்தின் வாரிசாக எம்மால் 23 .4.2012ம் நாள் நியமிக்கப்பட்டு 27.4.2012 ஆவணத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட பெங்களூர் ஆசிரம பீடாதிபதி நித்தியானந் தாவை இன்று 19.10.2012 முதல் வாரிசாக பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அறிவித்தார்.

0 கருத்துக்கள் :