இணையம் கைதொலைபேசி போன்றவற்றால் பெண்களுக்கு ஆபாத்து

4.10.12

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணைய பாவனையே பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்கான மூல காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் குடும்ப நல அலுவலகம் – ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வு கொழும்பு, அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களில் 70 சதவீதமானோர் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணைய பாவனையால் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கையடக்கத் தொலைபேசி மூலம் கிடைக்கும் தவறான அழைப்பு ´மிஸ்ட் கோல்´ மூலம் ஏற்படும் உறவினால் பெண்கள் அதிகம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு கையடக்கத் தொலைபேசி பெற்றுக் கொடுக்கும் போது அவர்கள் அதனூடாக என்ன செய்கிறார்ள் என அவதானிக்க வேண்டும் எனவும் இணைய வனை குறித்து பெற்றோர் பிள்ளைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்துக்கள் :