முதல்வரின் அலட்சியப் போக்கே யாழ். நகர பகுதியில் நடக்கும் கலாசார சீர்கேட்டுக்கு காரணம்!

20.10.12

இன்று யாழ் மாநாகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெருமளவிலான போதைப் பொருள் விற்பனையும், அதிகளவிலான விபச்சார நடவடிக்கைகளும், அதிகமான சிறுவர் து~;பிரயோகங்களும், கசிப்பு உற்பத்திகளும், நள்ளிரவில் மதுபோதையில் இளைஞர்களில் அடாவடித்தனங்களும் கொலை, கொள்ளை என்பனவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் எமது சமூகத்தினர் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றார்கள். நாளாந்தம் பெண்கள் அச்சத்துடனேயே வாழவேண்டிய நிலமை தற்போது உருவாகியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் எமது தமிழ் சமூகத்தை சீரழித்து கல்வி, கலாச்சாரத்தில் பின்தள்ளி எமது சமூகத்தை ஓரங்கட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே கருதமுடிகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் தனியார் விடுதிகளையும், தேவையற்ற இடத்தில் இயங்கும் விடுதிகளையும் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தான் இப்படியான நாசகார செயல்கள் மாநகரசபை எல்லைக்குள் தொடர்ந்து நடக்கின்றன. எனினும் ஈபிடியின் மாநகரசபை உறுப்பினர் விஜயகாந் பொலிஸாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை இன்றைய வீரகேசரி நாளேட்டில் பார்க்கக் கூடியதாக இருந்தது. தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தின் இதயம் என கருதப்படக்கூடிய பஸ்நிலையத்தில் இரவு வேளைகளில் மோசமான நிலையில் கலாசாரச் சீரழிவு இடம்பெற்றதாகவும் தான் இதை நேரில் பார்வையிட்டதாகவும் அறிவித்திருந்தார். அவ்வாறு விஜயகாந் நேரில் பார்த்தார் எனில் ஒரு மாநகரசபை உறுப்பினர் என்ற வகையில் அந்த இடத்திலேயே நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மக்கள் மத்தியில் வேலிகளே பயிர்களை மேய்கின்றனவா என சந்தேகத்தை கிளப்பியுள்ளன. இவ்வாறான சந்தேகங்களில் ஆச்சரியப்படக்கூடிய விடயம் ஏதுவேனும் இல்லை. ஏனெனில் ஈபிடிபியின் அண்மைக்கால நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால் மக்களின் சந்தேகங்களும் சரியாகத்தான் இருக்கும். எனவே இப்படியான செயல்களுக்கு யாழ் மாநகரசபை முதல்வரின் அலட்சியப் போக்கே முக்கிய காரணமாக அமைகின்றது. எனவே மாநகர முதல்வர் உடனடியாக பிரச்சனைகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் மாநகர முதல்வருக்கு எதிராக ஒழுக்காற்று சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாவேன். எஸ். நிஷாந்தன் (ச.நீ) முன்னால் யாழ் மாநகரசபை உறுப்பினர் தீவக இளைஞர் அமைப்பாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு nishansnt2012@gmail.com

0 கருத்துக்கள் :