இலங்கைப் பெண்ணை மணம் முடிக்க பதவிதுறக்க முன்வந்த இந்திய இராணுவ மேஜர்

31.10.12

இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்தவராவார்.

இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாலும் இலங்கைப் பெண்ணுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலுமே அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதுள்ளது என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

இருப்பினும், விகாஸ் குமாரின் ராஜினாமாவை இராணுவம் மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்திய இராணுவம் மேன்முறையீடு செய்துள்ளது.

மேஜர் விகாஸ் குமாரின் காதலியான இலங்கைப் பெண் அனிலா ரணமாலி குணரத்ன, பெங்களூரில் முதுமாணிப் பட்டக் கற்கை நெறியொன்றை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருந்தனர்.

இந்திய இராணுவ சட்டப்படி, வெளிநாட்டுப் பிரஜையொருவரை இந்திய இராணுவத்தில் உள்ள ஒருவர் திருமணம் செய்ய முடியாது. இதனாலேயே விகாஸ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :