விடுதலைப்புலிகளை அழித்தமை குறித்து கடும் ஆட்சேபனை தெரிவித்த வட அயர்லாந்து போராளி! காணொளி

19.10.12

வட அயர்லாந்து போராளி ஒருவர் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த விதம் தொடர்பாக தனது கடுமையான ஆட்சேபனையை கொலம்பிய பேச்சுவார்த்தையின்போது வெளியிட்டார். இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை கபடதனமாக அளித்தது போல கொலம்பிய சுதந்திர விடுதலைப் போராட்ட அமைப்பை கொலம்பிய அரசு அளிக்க முற்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அரசு கொலம்பியாவில் நடைபெறும் யுத்தம் மற்றைய நாட்டு யுத்தங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது என மழுப்பலாக பதிலளித்தார். இலங்கை தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் பரீட்சயமானதும் தமிழர்களுடன் நெருங்கிய உறவை பேணிவரும் ஐ.ஆர்.ஏ அமைப்பின் முக்கிய தளபதியே தமிழருக்காக தமிழரின் மீது திணிக்கபட்ட யுத்தத்தினை கொலம்பிய பேச்சுவார்த்தையில் தமிழ் ஊடகவியலாளருடன் சேர்ந்து வெளிபடுத்தினார்.

0 கருத்துக்கள் :