மாவீரர் நாள் எவ்வாறு அனுஸ்டிக்க வேண்டும்? தமிழீழ மாவீரர் பணிமனையின் விளக்கம்

23.10.12

தாய் மண்ணுக்காக தம்முயிரை ஈர்ந்த மாவீரச் செல்வங்களுக்காக கொண்டாடப்படும் நாளாக மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடவேண்டும் என தமிழீழ தேசியத் தலைவரின் அனுமதியுடன் வெளியானதே மாவீரர்நாள் கையேடாகும். மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாவரும் ஒரே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் வெளியான கையேடு உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் புலிகள் காரியாலயங்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட குறிப்பேட்டை அடியொற்றி நடக்க வேண்டியது அனைவரதும் கடமை என்றும் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் புலம்பெயந்துள்ள மக்களால் அனுஸ்டிக்கப்படும் மாவீரர்களுக்கான அப்புனித நாளை எவ்வாறு அனுஸ்டிக்க வேண்டும் எனவும் மாவீரர் கையேட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஏற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரின் பார்வைக்காக அக்கையேட்டில் இருந்து சில முக்கியமான பக்க பிரதிகளை தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடகங்களினூடாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :