தமிழீழ கடலிலும் மட்டு கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான மாவீரர்கள் நினைவு நாள் இன்று

1.10.12

01.10.1999ம் அன்று நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் - குடத்தனை, யாழ்ப்பாணம்) மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா - தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா - கரவெட்டி, யாழ்ப்பாணம்) கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் - நீர்வேலி, யாழ்ப்பாணம்) கப்டன் எழில்அழகன் (சோமசுந்தரம் கமல்ராஜ் - மூதூர், திருகோணமலை) கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்) (கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் - பொலிகண்டி, யாழ்ப்பாணம்) கப்டன் கோவலன் (நடராசா இந்துக்குமார் - புத்தூர், யாழ்ப்பாணம்) கப்டன் தமிழ்க்கன்னி (சூசைப்பிள்ளை மேரிகொன்சியா - முள்ளியான், யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதே நாள் மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் அருச்சுனன் (சிவநேசராசா செல்வகுமார் - நாவற்காடு, மட்டக்களப்பு) கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரவேங்கை மாதுமை (ஈஸ்வரராசா பிரதீபா - கரடியானாறு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரக்ளை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 கருத்துக்கள் :