புலம்பெயர் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இலங்கை அரசால் நிராகரிப்பு

27.10.12

புலம்பெயர் மக்களினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம நிராகரித்துள்ளது.

கடந்த 19ம்  திகதி  புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக  இலங்கை அரசாங்த்தின் சார்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த புலம்பெயர் சமூகம், சுயநிர்ணய ஆட்சியை ஏற்றுக்கொள்வது, தமிழ் மக்கள் ஈழத் தமிழர்கள் என ஏற்றுக்கொள்வது, போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை இணங்குவது ஆகிய விடயங்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், சர்வதேச தலையீட்டுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தாம் தயாராக இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயில் உள்ள தமிழீழ குழுவின் சார்பில் பஞ்சகுலசிங்கம் கந்தையா இந்த கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் குறித்த கோரிக்கை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

0 கருத்துக்கள் :