மாவீரர்நாளை குறிவைத்து ஜரோப்பியாவுக்குள் சிறீலங்கா புலனாய்வாளர்கள்.

20.10.12

தமிழீழ தேசிய மாவீரர்நாளை குழப்பும் விதமாக ஜரோப்பிய நாடுகளுக்கு சிறீலங்கா புலனாய்வு குழு ஒன்று இறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன பிரித்தானியா,பிரான்ஸ்,யேர்மனி,சுவிஸ் போன்ற நாடுகளையே இந்த கும்பல் குறிவைத்துள்ளது. இந்த அணியினர் சில ஊடகங்களுக்குள்ளும் புகுந்து தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பிரித்தானியா,பிரான்ஸ்,யேர்மனி போன்ற இன்னும் பல நாடுகளில் மாவீரர்நாளை நடத்தும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் என்று சொல்லப்படும் தமிழீழ தேசியத் தலைவரால் கட்டமைக்கப்பட்டு சிறீலங்கா அரசிற்கு இன்றும் பாரிய அச்சத்தை ஏற்படுத்திவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரை தாக்குவதற்கும் சிறீலங்கா புலனாய்வு குழுவினர் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வருடமே பிரித்தானியா,பிரான்ஸ்,யேர்மனி போன்ற நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கொலைவெறி தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிர்தப்பியிருந்தமை யாவரும் அறிந்ததே.

0 கருத்துக்கள் :