யாழ் கோப்பாயில் இரு குடும்பத்தகராறு வீட்டுக்குத் தீ. வீடும் உடைமைகளும் நாசம்

2.10.12

யாழ்.கோப்பாய் பொலிஸ் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையே நிலவிய பகைமை வீட்டுக்கு தீயிடும் சம்பவம் வரை சென்றுள்ளது. இதனால் சுமார் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகளுடன் ஒரு பகுதி வீடும் எரிந்து நாசமாகியது. இது தொடர்பாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறி குகனேசன் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். நேற்று இரவு வேளை வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது இதனால் வெளியில் நின்ற மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியுள்ளது. கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டடுள்ளனர். இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 10 ஆம் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :