லண்டனில் குடும்பப் தகராறு ஓடும் ரயில் மீது விழுந்து ஈழத்தமிழர் தற்கொலை!

19.10.12

கடந்த 2 தினங்களுக்கு முன்னர், லண்டன் சவுத் ஹரோ பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஓடும் ரயில் மீது விழுந்து ஒருவர் தற்கொலைசெய்துள்ளார் எட்வின் கிருஸ்டோ மரியாம் பிள்ளை என்று அழைக்கப்படும் ஈழத் தமிழர் ஒருவரே இவ்வாறு தற்கொலைசெய்துகொண்டவர் ஆவார். குடும்பப் பிரச்சனை காரணமாக இவர் தற்கொலைசெய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர், பொருளாதாரப் பிரச்சனையில் இருந்ததாகவும், வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனமுடைந்த நிலையில், தற்கொலைசெய்துகொண்டதாகவும் மேலும் அறியப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தில், தற்கொலை என்னும் செயல் புரையோடிப்போய் உள்ளது. சிறிய பிரச்சனைகளையும் சமாளிக்க முடியாமல் தற்கொலைசெய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை தமிழர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும். மனவேதனை மற்றும் விரக்த்தி அடையும் தமிழர்கள், அதற்கான கவுன்சிலிங்கை செய்வதன் மூலம் அதில் இருந்து விடுபடமுடியும். பணப்பிரச்சனை என்றால், நல்ல நிதி ஆலோசகர் ஒருவரை அணுகினால், பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபட முடியும். இதனை மனதில் நிறுத்து தமிழர்கள் செயல்படுவது நல்லது.

0 கருத்துக்கள் :