காதலித்து ஏமாற்றிய மாணவி கழுத்து அறுத்து கொலை

11.10.12

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை சித்தாத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவரது மகள் வினோதினி(17). இவர் கூத்ததாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகன் பிரகாஷ் (22) . கல்லூரி மாணவர். பூண்டியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி 3- ம் ஆண்டு படித்து வருகிறார். வினோதினிக்கும் பிரகாசுக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பெற்றோருக்கு தெரியாமல் காதலர்கள் இருவரும் வீட்டை வீட்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி வினோதினியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வினோதினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மகளை கண்டித்தனர். காதலன் பிரகாசுடன் பழகுவதை நிறுத்தி விடு என்று அறிவுரை கூறினர். அதன்படி பிரகாசுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இதை அறிந்த பிரகாஷ் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் வினோதினி அதற்கு மறுப்பு தெரிவித்தார். நேற்று இரவு 8 மணிக்கு வினோதியை யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள வயல் வெளிக்கு பிரகாஷ் அழைத்துச் சென்றார். அப்போது வினோதினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னை காதலித்து ஏமாற்றி விட்டாயே என சத்தம் போட்டார். அதற்கு வினோதினி தனது பெற்றோர் கண்டித்ததை கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோதினியின் கழுத்தை இறுக்கமாக பிடித்து அறுத்தார். கழுத்தில் இருந்து ரத்தம் பிறீட்டு வெளியேறிய நிலையில் வினோதினி வலியால் அலறி துடித்தார். ஆனாலும் பிரகாஷ் விட வில்லை. தொடர்ந்து கழுத்தை அறுக்கவே வினோதினி சம்பவ இடத்திலே பரிதாபமாக உரியிழந்தார். பின்னர் அவரது உடலை அங்கேயே போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார். நீண்ட நேரமாகியும் மகள் வராததை கண்டு பதட்டம் அடைந்த வினோதினியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது தனது மகள் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்து மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி பிரகாசை தேடி வந்தனர். அவர் சிறு காயங்களுடன் கூத்தாநல்லூர் போலீசில் சரணடைந்தார். அவர் போலீசில் கூறும் போது, காதலியை கொலை செய்த பின்னர் தானும் கத்தியால் கீறிக் கொண்டதாக கூறினார். அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். காதலித்து ஏமாற்றிய மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கூத்தா நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துக்கள் :