யாழ் அரியாலையில் கிணற்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

10.10.12

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டப்பகுதியில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான ஆயுதங்கள் பாழடைந்த கிணறொன்றில் இருந்து யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை மீட்டுள்ளதாக யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிஹெரா தெரிவித்தார். மோட்டார் குண்டுகள் 240, கிளைமோர் குண்டுகள் 2, 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 8, கைக்குண்டுகள் 42 குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் கருவிகள், துப்பாக்கி ரவைகள் 1615 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இவை மீட்க்கப்பட்டுள்ளன. இதேவேளை யுத்ததின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பொலிஸாரால் பெருமளவு ஆயுங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துக்கள் :