ஆனையிறவில் இன்று அதிகாலை வாகன விபத்து.ஒருவர் பலி

1.10.12

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச் சம்பவம் ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. டிப்பர் வாகனச் சாரதியின் சடலம் இன்னும் அதே இடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தின் போது சொகுசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :