ஒருவர் வந்தாலும் நான் 5 மணிநேரம் இசை நிகழ்ச்சி நடத்துவேன்: இளையராஜா

30.10.12

கனடா தலைநகர் டொரண்டோவில் நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக நிகழ்ச்சியை நடத்தும் Trinity Events அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அரங்கத்தின் நுழைவு டிக்கெட்டுகள் பெரும்பாலனவை விற்றுவிட்ட நிலையில் நிகழ்ச்சி எவ்வித இடையூறும் இன்றி நடப்பது உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசை நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் மாவீரர் மாதம் என்ற புது யுக்தியை கையாண்ட ஒரு பிரிவினர், தங்கள் நோக்கம் நிறைவேறாததை எண்ணி, நிலைகுலைந்துள்ளார்கள். இலங்கை அரசின் பின்னணியில்தான் இந்த நிகழ்ச்சி நடக்கின்றது என்கிற அவர்களின் வாதத்தை கனடிய தமிழர்க்ளும், தமிழ் ஊடகங்களும் ஏற்க தயாரில்லை. கனடாவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும், இணையதளங்களும் இந்த நிகழ்ச்சிக்கு பேராதரவு தந்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் Trinity Events நிறுவனத்தார் இன்று இசைஞானி இளையராஜா பேசிய ஒரு காணொளியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக கனடாவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். எனக்காக அந்த பெரிய ஸ்டேடியத்தில் ஒர்ரே ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தாலும், அவனுக்காக நான் ஐந்து மணிநேரம் இசை நிகழ்ச்சி நடத்துவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். இந்த காணொளியை வெளிவந்ததும், கனடிய தமிழர்களும் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு, இந்த நிகழ்ச்சியை எப்படியாவது மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றவேண்டும் என துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

0 கருத்துக்கள் :