கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை! மனைவி, மாமியார் உள்பட 5 பேர் கைது!

23.10.12

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்ததாக மனைவி, மாமியார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மேட்டுப்பாளையம் குட்டையூரைச் சேர்ந்த மாரனன் மகன் ரமேஷ்(45). இவரது மனைவி அஜந்தா (35). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நீலகிரி அடுத்த குன்னூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இ‌தற்காக ரமேஷ்- அஜந்தா ஆகியோர் குடும்பத்துடன் குன்னூரில் வசித்து வந்தனர். அஜந்தா, ஆம்வே என்ற மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் பணியாற்றி வந்தார். இதில் திருமுகையூரைச் சேர்ந்த முத்துசாமி என்பவருடன் அஜந்தாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை ரமேஷ் பலமுறை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று அஜந்தா, தனது தாய் ராஜம்மாள், மற்றும் மூன்று பேர் ரமேஷை கொலை செய்தனர். ரமேஷின் தந்தை குன்னூர் காவல் நிலையத்தில் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினார். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கணவனை கொலை செய்ததாக மனைவி அஜந்தா (35), மாமியார் ராஜ்ம்மாள் (64), கள்ளக்காதலன் முத்துசாமி, மற்றும் ரவி உள்‌ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :