வவுனியாவில் காவியமான நான்கு மாவீரர்களி​ன் 27ம் ஆண்டு நினைவு நாள்

25.10.12

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு:

1.கப்டன் லோறன்ஸ் (மருதலிங்கம் சிவலிங்கம் - கொக்குத்தொடுவாய், மணலாறு)

2.லெப்டினன்ட் சபா (கந்தையா சிவமூர்த்தி - கொக்குத்தொடுவாய், மணலாறு.)

3.2ம் லெப்டினன்ட் லலித் (நடேசு இராஜேந்திரன் - முள்ளியவளை, 4

4முல்லைத்தீவு.) 4.2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்) (தம்பிஐயா
5இரத்தினசாமி - முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்

0 கருத்துக்கள் :