யாழ்.போதனாவைத்தியசாலையில் இந்தியப்படையால் படுகொலை. 25ம் ஆண்டு நினைவு (காணொளி, பட இணைப்பு)

21.10.12

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களின் 25 வது நினைவு தினம் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன்போது 21 பணியாளர்கள் இந்தியப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்நினைவு பிரார்த்தனை இடம்பெறும். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, பொது மக்களால் ஈகைச் சுடருடம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.பவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலை ஊழியர்கள் தாதியர்கள், தாதிய மாணவர்கள், உறவுகளை இழந்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துக்கள் :