சினிமா படப்பிடிப்பில் கார் மோதி 2 குழந்தைகள் பலி: நடிகர் தப்பி ஓட்டம்

26.10.12

ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்துக்கு அருகிலுள்ள சைபராபாத் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சந்தா நகரில் இன்று (26,10,2012) நடைபெற்ற தெலுங்கு டி.வி. சீரியல் தொடர்பான படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்து கார் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. விபத்தை தொடர்ந்து அந்த தெலுங்கு நடிகர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்தில் அந்த தெலுங்கு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆறு வயது டி.வி. குழந்தை நட்சத்திரமான சாத்விக் ரெட்டியும் அவள் அருகில் நின்றிருந்த மற்றொரு சிறுவனும் சிறுமியும் படுகாயமடைந்தனர். இந்த மூன்று பேரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் டி.வி. குழந்தை நட்சத்திரம் சாத்விக் ரெட்டியும் மற்றொரு சிறுவனும் பலியானார்கள். மற்றொரு பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :