இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் 144வது பிறந்த நாள்

2.10.12

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய விடுமுறை தினங்களில் ஒன்றான ஒக்ரோபர் 2ம் திகதி, ஐ.நாவினால் அனைத்துலக வன்முறையற்ற நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு எப்போதும் விரும்பியது இல்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் பலர் வற்புறுத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாக தனது பிறந்த நாளை அவர் கொண்டாட சம்மதம் தெரிவித்தார் என்ற விடயம் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி: இன்று காலை ஆளுனர் ரோசய்யா மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். காலை 10.15 மணியளவில் மெரினா கடற்கரை அருகே உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணியும், 11.30 மணிக்கு காந்தி அடிகளின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கிடும் கண்காட்சி திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது.

0 கருத்துக்கள் :