கடற்கரும்பு​லி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களி​ன் 11ம் ஆண்டு நினைவு நாள்!

26.10.12

முல்லைத்தீவில் காவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று, கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (சின்னப்பு நந்தினி - செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக வந்த படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது
1.கப்டன் அகத்தியன் (துரைசிங்கம் நகுலேந்திரன் - மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை)
2.கப்டன் நீலவாணன் (சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன் - இறால்குழி, மூதூர், திருகோணமலை)
3.2ம் லெப்டினன்ட் பூவிழி (கணபதிப்பிள்ளை றோகினி - கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். 
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

 மிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்0 கருத்துக்கள் :