யாழ். கோப்பாயில் இரு பஸ்கள் நேருக்குநோ் மோதியதில் மூவர் பலி! 10க்கு மேற்பட்டவர்கள் படுகாயம்

5.10.12

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இருபாலை - கோப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 :00 மணியளவில் நடைபெற்ற இரு பஸ்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் இரு சாரதிகளும் உயிரிழந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பஸ்களின் சாரதிகள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேரூந்து ஒன்றும், தென்னிலங்கையிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இருபாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :