சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் 12ம் ஆண்டு நினைவு நாள்!

23.10.12

ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், பிற நிகழ்வுகளில் காவியமான ஆறு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

 18.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின் போது நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 23.10.2000 அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் (மாயாண்டி ஜெயக்குமார் - கோணாவில், கிளிநொச்சி) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
 23.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மற்றொரு மோதலின்போது
கப்டன் சுதனி (பரமேஸ்வரன் ஜீவரதி - பூநகரி, கிளிநொச்சி)

 2ம் லெப்டினன்ட் தூயவதனா (ரட்ணசிங்கம் ரட்ணபிரியா - மிருசுவில், யாழ்ப்பாணம்)

 வீரவேங்கை தமிழன்பு (கணபதிப்பிள்ளை விஜயா - திரியாய், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது
 மேஜர் தேவன் (சந்திரசேகரம் சிறிபவான் - உடுத்துறை, யாழ்ப்பாணம்)

கப்டன் எல்லாளன் (இராசரட்ணம் இராஜ்குமார் - அரியாலை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புலித்தேவன் (நடராசா திருச்செந்தூரன் - முரசுமோட்டை, கிளிநொச்சி)
வீரவேங்கை நிலாகரன் (மறைமாறன்) (பொன்ராசா ரஞ்சித்குமார் - உப்புக்குளம், மன்னார்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருடனான மோதலின்போது

மேஜர் வசீகரன் (வீரவாகு சிவராஜா - குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி லெப்டினன்ட் பாவலன் (பாலகிருஸ்ணன் பாலமுரளி - இணுவில், யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து போராளிகளையும் இன்நாளில் நினவுகூருகிறோம்

0 கருத்துக்கள் :