நம் சொந்தங்கள் சிந்திய இரத்தம் தான் சிவப்பு கம்பளம் - சீமான் சீற்றம்

21.9.12

இலங்கையில் நம் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை ஓராண்டுக் காலத்தில் கொன்று குவித்த ராஜபக்சவுக்கு தொடர்ந்து சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து தமிழனை அவமதிக்கிறது மன்மோகன் சிங் அரசு.இந்த நாட்டின் மீனவர்கள் 554 பேரைக் கொன்று, அவர்களின் மனைவிமார்களின் தாலியை அறுத்த சிங்கள கடற்படையின் தலைவராக இருப்பவர் ராஜபக்ச. அவரை இந்தியாவிற்கு அழைக்கக் கூடாது என்று தமிழர்களாகிய நாம் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருகிறோம். ஆனால், இலங்கை எங்களது நட்பு நாடு என்று தொடர்ந்து கூறி வருகிறது இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. எம் இனத்தை அழித்த சிங்களவன் உனக்கு நண்பனென்றால், தமிழர்கள் உங்களுக்கு பகைவர்களா? சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்தியர்களல்லவா? எமது இனத்தை கூண்டோடு அழித்தவன் உங்களுக்கு நண்பனா? வரட்டும் நாடாளுமன்றத் தேர்தல், அப்போது காட்டுகிறோம் உங்களுக்கு நாங்கள் யார் என்பதை” என சீமான் தெரிவித்தார்

2 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

எல்லாம் அரசியல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நம் மக்கள் ஒன்று சேர்ந்து போராடும் வரை இதற்கு ஒரு தீர்வு வராது...முதலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)