எங்களை அடிப்பீர்களா! என சொல்லிச் சொல்லி தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை!

9.9.12


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். தமிழகத்தில் சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டதைச் சொல்லிச் சொல்லி தங்களை சிங்களக் கடற்படையினர் அடித்ததாக கூறியுள்ளனர் மீ்னவர்கள்.


சமீபத்தில் புனிதப் பயணமாக தமிழகத்திற்கு வந்த சிங்கள யாத்திரீகர்கள், பூண்டி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் தாக்குதலுக்குள்ளானார்கள்.

இதையடுத்து சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் பத்திரமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

தமிழகத்திற்கு வந்த சிங்களர்களை தாக்குவீர்களா என்று கூறிக் கூறி தங்களை இலங்கைக் கடற்படையினர் அடித்ததாக கூறியுள்ளனர் தமிழக மீனவர்கள்.

கச்சத்தீவு அருகே 2 படகுகளில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தகவல்களை இலங்கைக் கடற்படையினரிடமிருந்து மீண்டு வந்த இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :