விபசார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளருடன் மூன்று பெண்களும் கைது

22.9.12

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக வெள்ளவத்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த விபசாரவிடுதியினை சுற்றிவளைத்த பொலிஸார் 3 பெண்கள் அடங்கலாக நால்வரைக் கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை காலிவீதிப் பகுதியில் இயங்கிவந்த குறித்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளரான ஆணொருவரையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரையும் இக்குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலும் இரு பெண்களையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த மசாஜ்நிலையம் தொடர்பாக பாணந்துறை வலானை குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குத் தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் குறித்த மசாஜ் நிலையத்தை சோதனையிடுவதற்கான நீதிமன்றத்தின் ஆணையினைப் பெற்றுக்கொண்டதன் பயனாகக் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பின் போது பொகவந்தலாவை, பெந்தொட்ட, மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளைக் சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :