இலங்கைக்கு எதிரான தாக்குதலின் பின்னணி விடுதலைப் புலிகளாம்!ரம்புக்வெல்ல

6.9.12


இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்களிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணி தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் செயற்பாடுகளாக இருக்கக் கூடும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழ்நாட்டிற்கான பயண எச்சரிக்கை பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இலங்கையர்களுக்கு எதிரான செயற்பாடுகள், முற்றுகைகள், தாக்குதல்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கான பயண எச்சரிக்கையை இலங்கை அரசு இவ்வாரம் அறிவித்திருந்தது.

0 கருத்துக்கள் :