முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு ‘சவரா சம்ஸ்க்ருதி’ விருது..

7.9.12


கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு “சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் 2012″ விருது வழங்கப்பட்டது

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அறிவியல் விஞ்ஞானியாக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். குடியரசுத்தலைவராக பதவி வகித்தபோதும் சரி, பதவிக்காலம் முடிந்த பின்னரும் சரி தனது அனுபவங்களையும், அறிவியல் அறிவையும் மக்களுக்காக பயன்படுத்தி வருகிறார்.

இவருடைய சீரிய செயலை பாராட்டி கொச்சியில் இவருக்கு “சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் 2012″ விருது வழங்கப்பட்டது. ரூ.2,22,222 ரொக்கம் அடங்கிய இந்த விருதை, வியாழக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் கார்டினல் மார் ஜார்ஜ் ஆலன் செரி வழங்கினார். இந்த விருதைப் பெறும் முதல் அறிஞர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :