மர நிழலுக்கு கீழ் வாழும் மக்களிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு மிரட்டும் மர்ம நபர்கள் !

25.9.12

செட்டிகுளம் அகதி முகாமில் இருந்து மீள்குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்களிடம் சீருடையற்ற நபர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் மக்களின் தொலைபேசி இலக்கங்களையும் அவர்கள் மிரட்டிப் பெற்றுக் கொண்டனர் என்று அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. மர நிழல்களின் கீழும், வற்றாப்பளை மகா வித்தியாலயக் கட்டடத்திற்கும் இருந்த மக்களிடம் சென்ற இந்த சீருடையற்ற நபர்கள் அரை குறைத் தமிழில் உரையாடி அந்த மக்கள் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசிகளின் இலக்கங்களைப் பெறுவ தில் குறியாக இருந்தனர். அப்படி இலக்கங்களை வழங்க மறுத்தவர்களை அவர்கள் கடுமையாக மிரட்டியதாகவும் தெரியவந்தது.

0 கருத்துக்கள் :