தீமையை எரித்திட தீயெனமாறுவோம்!! தீயினில் எம்மவர் கருகிடவேண்டாம்-

18.9.12

தன்மானமும் இனமானமும் உள்ள என் தமிழ் சொந்தங்களே!! மறுக்கப்பட்டநீதிக்காக தீயெனமாறி எமை நெருங்கிவரும் தடைகளை எரித்து சாம்பலாக்கவேண்டியது காலத்தின்கட்டளையாகும். தட்டாத கதவுகள் ஒருபோதும் திறக்காது இது யதார்த்தமான உண்மை தட்டித்தட்டி தட்டியகைகள் வலித்தாலும் முட்டிமோதும் இளையதலைமுறையின் வேகத்தையும் விவேகத்தையும் தடுக்க எவராலும் முடியாது "இளங்கன்று பயமாறியாது" என்பார் உண்மைதான் பயத்துக்கும் பயம் கொடுக்கும் பாயும் புலிகளாகிய தமிழன் சேனை ஒருபோதும் தரத்திலும் சரி பலத்திலும் சரி தாழ்ந்து போகாது என்பதை வரலாறு வலுவானசாட்ச்சியங்களுடன் நீரூபித்துக்காட்டுகின்றது .தான் இழந்த நிலத்தை முன்னூறு வருடம் கழித்து மீட்டெடுத்த வரலாறும் எம் முன்னோர்களிடம் உண்டு. அதாவது காலமாற்றத்தாலும் கயவர்களின் நாசகார வேலைகளினாலும் எமது இனம் அவ்வப்போது வீழ்த்தப்பட்டாலும் வரலாற்றில் தமிழன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பவனல்ல என்பது நிதர்சனம். உலகத்தமிழன் பன்னிரண்டு கோடியாம் ஆனால் ஒரு தெருக்கோடிகூட தமிழனுக்கென்று இன்றில்லை காரணம் பூகோள அரசியல் காரணிகளும் சுயநலவாதப்போக்குடய இந்த உலகமும் சேர்ந்து காலம் காலமாக எமது இனத்தை ஒரு அடக்குமுறைக்குள் வைத்து ஆனாதரவான நிலையிலே தள்ளியுள்ளதை இல்லை என்று மறுத்துச்சொல்லும் வல்லமையும் தகுதியும் உலகத்தில் எவருக்குமே இல்லை. 'உயர்ந்தால்தான் மலைகள் வீழ்ந்தால்தான் நதிகள்' எனவே வீழ்ச்சிகள்கூட சிலசமயம் பெருமிதம் கொள்ளும் நாங்கள் இன்று வீழ்த்தப்பட்டோம் ஓரிரு துளிகளாக வீழ்த்தப்பட்டாலும் ஒன்றாய் சேர்ந்து பெருவெள்ளமாய் திரண்டு அடக்குமுறை என்ற அணைக்கட்டை தகர்த்துபாய்ந்து செல்லவேண்டிய மனஉறுதியையும் வல்லமையினையும் உருவாக்கி இந்த உலகத்தில் எங்கள் அடையாளத்தை ஆழமாகப்பதித்திடவேண்டும். கொடுமையைக்கண்டு கொதிக்கும்தமிழனே!! தீயென மாறினால் தீமைகள் எரியுமே தவிர தீயிலே நீ எரிந்தால் மீதியை யார் காப்பார்?? ஈழத்தில் இரத்தம் கண்டு இதயம் கனத்த எங்கள் முத்துக்குமார் மூட்டியவிடுதலைத்தீ தமிழகத்தை தட்டி எழுப்பியது என்பது உண்மைதான் ஆனால் முத்தான அந்த முத்துக்குமாரின் இழப்பு என்பது தமிழகத்துக்கு ஏற்படுத்திய தாக்கம் என்பது ஈடுசெய்ய முடியாதது. அதாவது புறாவின் உயிரைக்காக்க சிபி அரசன் எவ்வாறு தன்னையே தானமாக கொடுத்தானோ அதேபோல அந்த தமிழ்மறவன் தன் இனம் காக்க தன்னையே தானமாக்கி தீயிலே கருகி விடுதலைக்கான வித்தாக மண்ணிலே வீழ்ந்தான். அது அன்று ஆனால் அதனைத்தொடர்ந்து எம் சொந்தங்கள் பல தீக்குளித்து தம் இனத்தின் இழிநிலைகண்டு உயிர்நீத்துப்போனார் ஆனால் பலன் என்ன?? உலகத்தில் விலைமதிக்க முடியாதது மனித உயிர் என்று பிதற்றிக்கொள்ளும் மனிதர்களும் அவர்கள் மரணத்தை கண்டு கண்ணீர் விடவும் இல்லை. ஏன் என்று காரணம் கேட்கவும் இல்லை. சுயநலவாதிகள்முன்னே நாங்கள் எங்கள் விடுதலைக்காய் விதரம் இருந்தோம் சொல்லாடினோம் வில்லாடினோம் ஏன் அண்ணன் முருகதாசன் இந்த உலகத்தின் நீதிமன்றம் என்று கருதப்படும் ஐநாசபைமுன்கூட நடந்துகொண்டு எரிந்து நீதிகேட்டு நெருப்போடு நெருப்பாக எரிந்துபோனான்,எங்கள் இதயங்கள் அத்தனையும் அன்று அணல் போல கொதித்தது உண்மையில் இந்த உலகம் இதை கண்டு வெட்கிதலைகுனிந்தே ஆகவேண்டும். தம்மை நீதிபதிகள் என்பவர்கள் எல்லோருமே தூக்கிலே தொங்கியிருக்கவேண்டும் காரணம் எங்கெல்லாமோ நடைபெறும் கொடுமைகளுக்குஎல்லாம் நீதிசொல்லும் ஐநாசபையின் முகமூடி அன்று அந்த நெருப்பிலே எரிக்கப்பட்டது. இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் தமிழனுக்கும் தமிழினத்துக்கும் இந்த உலகம் ஒருபோதும் நீதியையும் நியாயத்தையும் பெற்றுத்தரமாட்டாது என்பதை சுட்டிக்காட்டுகின்றது எனவே "அனுபவமே சிறந்த ஆசான்" என்பதைப்போல் கடந்தகால அனுபவங்களை மனதில் வைத்து நாங்கள் விழிப்பாகவும் விவேகமாகவும் செயற்படவேண்டுமே தவிர எம் இனம் காக்க எம்மையே இரையாக்கும் செயல்களில் இனியும் இறங்கிவிடக்கூடாது என்பதை உறுதியாக ஒவ்வெருதமிழனும் நினைவில் கொள்ளவேண்டும். ஈழத்துக்கு சகுனியான இந்தியா தன் எதிர்காலத்தை மறந்துபோனது நகைப்புக்குரியது மனிதாபிமான யுத்தம் என்று தலைப்பிட்டு தமிழ்மக்களை செங்குருதியில்குளிப்பாட்டி மனிதகுலத்துக்கே ஒவ்வாத ஒரு படுகொலையினை அதுவும் இந்த உலகத்தின் ஒத்தாசையுடனும் உதவியுடனும் செய்துமுடித்து இன்று உலகத்தில் தலை நிமிர்ந்து நடக்கும் போர்க்குற்றவாளி மஹிந்தவும் அவனது கூட்டமும். இந்த பூமியில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் அப்படிப்பட்ட கொடூரர்களின் கரங்களை இந்தியா அதாவது காந்தி காந்தி என்று தொண்டைத்தண்ணீர் வற்ற கத்தி அகிம்சை பேசும் இந்திய பற்றி உறவாடுவதன் நோக்கம் என்ன ??என்பது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் வாழும் ஆறுகோடிக்கும் அதிகமான தமிழர்களில் உணர்வுகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி அந்த போற்க்குற்றவாளிகளை வரவேற்று உபசரிக்கும் இந்தியாவின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதை அது அறியவில்லை என்பதை நினைக்கும் போது வேடிக்கையாகவும் கேலியாகவும் உள்ளது எது எவ்வாறாக இருந்தாலும் இந்தியா ஈழத்தமிழனுக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் மறுதாக்கத்தை வெகுவிரைவில் அனுபவிக்கும் என்பதில் மாற்றம் இல்லை. காரணம் ஈழத்தமிழர்கள் 'மதம் மொழி கலாச்சாரம்' என்ற மூன்றாலும் தெடர்புடையவர்களாய் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல் இந்தியத்தமிழர்களோடு தொடர்புகொண்டவர்களாய் அன்றுமுதல் இன்றுவரை தமது உறவுகளை பேணிப்பாதுகாத்து வருகின்ற நிலையில் இந்தியாவானது ஈழத்தமிழர்களை ஓரம்கட்டி இரத்தவெறிபிடித்த சிங்கள அரசோடு சேர்ந்து ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்குவதை ஒருபோது அங்கே வாழும் ஆறுகோடி தமிழர்களும் அனுமதிக்க மாட்டார்கள் அதையும் தாண்டி இந்தியா இன்று சிங்கள அரசுக்கு தனது ஆதரவைக்கொடுக்கின்றது என்றால் அது அங்கே வாழும் ஆறு கோடி தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை என்பதை தெட்டத்தெளிவாக்கி காட்டுகின்றது தன் குடிமக்களின் உணர்வுகள் மதிக்காத எத்தனையோநாடுகள் சுக்குநூறாக உடைந்துபோனதை பாவம் இந்தியா அறியவில்லைப்போல் உள்ளது,எது எவ்வாறாக இருந்தாலும் வரலாறு வரையப்போகும் உண்மைகளை இனிவரும் நாட்களே தீர்மானிக்கும். விலங்கிடப்படவேண்டிய கைகள் விருந்துண்ணும்போது விடுதலைகேட்கும் நாங்கள் ஏன் விறகாக எரியவேண்டும் நேற்றயதினம் அதிர்ச்சியான ஒரு செய்தியினை ஊடகங்கள் வெளியாக்கி எங்கள் இதயத்தைக்காயப்படுத்தின அதாவது மகிந்தவின் இந்தியவருகைக்கு எதிர்ப்புதெரிவித்தும் அதை தடுத்து நிறுத்தக்கோரியும் தமிழகத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தீக்குளித்ததாக வெளியான அந்த நிமிடம் எங்கள் கண்களில் கண்ணீர் மல்கியது குறித்த சாரதி தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டைரியில் எழுதியிருப்பதாக இந்திய இணையத்தளமொன்றில் வெளியாகியிருந்த தகவலனது 'இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சவை இந்தியாவிற்குள் விடக்கூடாது.இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்சவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சவை எதிர்க்க வேண்டும் என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே.மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார். உண்மையில் அந்த மானத்தமிழனின் உணர்விற்கும் ஈழத்தமிழினத்தின் மீது கொண்ட அன்பிற்கும் ஈழத்தமிழர்களாகிய எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு எம் அருமை சொந்தங்கள் யாரும் இனியும் இதுபோல செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். காரணம் தன்னையே தானமாக்கும் தன்மைகொண்ட போராளிகள் தீயில் எரிந்துபோவதால் எங்களுக்கு மேலும் இழப்புக்களே தவிர பலன் ஏதும் இல்லை ஒற்றுமையுடனும் வேகத்துடனும் எமதுபோராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய மாசற்ற ஈழ ஆதரவளர்களும் போராளிகளும் எங்களுடன் நீண்டகாலம் வாழவேண்டும் அதுவே எங்களுக்கு பலமும் எதிரியானவனுக்கு பலவீனமும் ஆகும் அதை விடுத்து இந்த சுயநலவாதிகள் முன்னே சாம்பலாகிப்போனால் அள்ளி திருநீறாக பூசிவிட்டு போவார்களே தவிர எவரும் எமக்கான நீதியினை பெற்றுத்தரப்போவதில்லை எனவே முத்துக்குமார்முதல் விஜயராஜ் வரை ஆக இனி தீக்குளிப்புப்பட்டியல் நிற்கவேண்டும் இனியும் நீண்டுசெல்லவேண்டாம் என்பதை அன்பாகவும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம் ஈழத்துக்காய் எரிந்த உடல்கள் போதும். -ஆதித்தன்

0 கருத்துக்கள் :