ஜெனீவாவில் சுவிஸ் உதவியோடு தாக்குதல் நடத்த இருக்கும் விடுதலைப் புலிகள்!

30.9.12

விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது இலங்கையில் உள்ள சில சிங்கள ஊடகங்கள். அதாவது புலிகள் என்று அவர்கள் குறிப்பிடுவது ஆயுதம் ஏந்திய போராளிகளை அல்ல ! ஈழத் தமிழ் அரசியல் போராளிகளைத் தான். வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மாணத்தைக் கொண்டுவர அமெரிக்காவில் உள்ள யு.எஸ்.டி.பக்(USTPAC) அமைப்பு முனைப்பு காட்டி வருகிறது. அதனுடன் இணைந்து உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) போன்ற அமைப்புகள் தமது அரசியல் பலத்தை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பான தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமிழ் அமைப்புகள் புதிய அரசியல் கதவு ஒன்றை திறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் உதவியோடு, மற்றும் சுவிஸ் அரசாங்கத்தின் உதவியோடும் பாரிய காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இயங்கிவரும், பலம் மிக்க தமிழர் அமைப்பான யு.எஸ்.டி.பக், தற்சமயம் ராஜாங்கச் செயலாளர் கிலரி கிங்டனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதனூடாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை ஆபிரிக்க நாடுகளோடு உலகத் தமிழர் பேரவை(GTF) நல்லுறவை வளர்த்து, அதன் செல்வாக்கோடு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர். சில ஐரோப்பிய நாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) அணுகி வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகின்றனர். இந்த மும்முனைத் தாக்குதலை இலங்கை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. இவ்வமைப்புகள் அனைத்தையும், புலிகளின் முற்போக்கு அமைப்பாக இலங்கை அரசு அறிவித்துவருகிறது. தவறான தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முற்பட்டுள்ளது. இதனையே இவர்கள் புலிகள் ஜெனீவாவில் தாக்குதல் நடத்தவிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாகச் செய்யும் எல்லா நடவடிக்கைகளையும், இலங்கை அரசு புலிகளின் நடவடிக்கை என்று கூறி, அதற்கு பயங்கரவாத முத்திரை குத்தப் பார்கிறது. புலிகள் போராடியவேளை, அவ்வமைப்பை பயங்கரவாதிகள் என்று வெற்றிகரமா முத்திரை குத்திய இலங்கை அரசு தற்போது இதேவேலையை, புலம் பெயர் தமிழர் அமைப்புகள் மீது குத்தப் பார்கிறது. ஆனால் அதன் பாச்சா பலிக்கவில்லை. 2013 மார்ச் மாதம் இலங்கைக்கு ஜெனீவாவில் பேரிடி விழ வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :