ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரரும் அவரது நண்பரும்.

6.9.12


டெல்லி ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த, ரயில்வே போலீஸ்காரர் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி விஷ்ணு கார்டன் பகுதியை சேர்ந்த ஒரு பெண், வெளியூர் சென்றுவிட்டு தனது தங்கையுடன் செவ்வாய்க்கிழமை தாமதமாக டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது நிலையத்தில் பிந்து சிங் (24) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அவரது நண்பர் ஹவன் பிரதாப் சிங் (21) என்பவரும் அவருடன் இருந்துள்ளார். வீட்டுக்கு செல்ல நள்ளிரவு பஸ் இல்லாததால் காலையில் செல்ல முடிவு செய்து ரயில் நிலைய பிளாட்பார்மில் இளம்பெண்கள் இருவரும் தங்கினர். அந்த பெண்ணின் தங்கை, ரயில் நிலைய லாக்கரில் லக்கேஜ் வைக்க சென்றுள்ளார். அப்போது பெண்ணிடம் பேச்சு கொடுத்த ஹவன் பிரதாப் சிங், பிந்து சிங் ஆகியோர், ரயில் நிலைய பிளாட்பார்மில் இரவில் இருப்பது ஆபத்து. விஐபி ஓய்வறை மேலே உள்ளது. அங்கு தங்கி கொள்ளுங்கள் என கூறி மாடிக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை இருவரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பெயரில் போலீஸ்காரர் பிந்து சிங், அவரது நண்பர் ஹவன் பிரதாப் சிங்கை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பிந்து சிங் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :