யாரிடம் முறையிட்டாலும் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: மஹிந்த

30.9.12

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என சிறிலங்கா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பத்தாம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வடக்கிலுள்ள இராணுவ முகாங்கள அகற்றுவதற்கான அழுத்தங்களை புதுடில்லி அரசு சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளியான செய்தி குறித்தே அரசு தரப்பிலிருந்து இந்தப் பதில் வெளியாகியுள்ளது. எவ்விதமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவே மாட்டாத. இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உறுதியாகவுள்ளார். வடக்கில் 1959 ஆம் ஆண்டுகளிலிருந்தே இராணுவ முகாம்கள் செயற்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எந்த ஓர் இராணுவ முகாமும் வடக்கிலிருந்து அகற்றப்படமாட்டாது என அரச உயர்மட்ட அதிகாரி ஒருவர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :