திருநெல்வேலியில் மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டவரை தப்ப விட்ட கோப்பாய் பொலிஸார்

6.9.12


வீதி திருத்த வேலைகளுக்காக வந்தவர் பாடசாலை மாணவியொருவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இளைஞர் குழுவினால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சியைச் சேர்ந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த வீதி வேலை செய்து வரும் நபர் ஒருவர், குறித்த மாணவியுடன் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.

காதலிப்பதாக கூறியே கதைப்பதற்காக வருமாறு குறித்த மாணவியை அவர் மாலையில் அழைத்து வந்தபோதும், இரவுவரை அவருடன் கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் குறித்த மாணவியையும் அவரையும் சுற்றிவளைத்து பிடித்த இளைஞர் குழுவினர், அவர்கள் இருவரையும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் கோப்பாய் பொலிஸார் லஞ்சம் பெற்றுக்கொண்டு இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாமல் அனுப்பி விட்டுள்ளனர். இதனை அறிந்த பொது மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதோடு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவிக்கு என்ன? நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை சம்பவம் தொடர்பாக் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :